அதிரடியாக அடுத்த படத்தை துவங்கிய வெங்கட் பிரபு!

அதிரடியாக நடந்து முடிந்த வெங்கட் பிரபுவின் அடுத்த பட பூஜை!

செய்திகள் 15-Dec-2016 1:35 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சென்னை-600028, இரண்டாவது இன்னிங்ஸ்’ திரைப்படத்திற்கும் முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அப்படக் குழுவினர். அந்த மகிழ்ச்சியோடு வெங்கட் பிரபு அதிரடியாக தனது அடுத்த படத்திற்கான பூஜையையும் இன்று காலை நடத்தி விட்டார்! இந்த படத்தை ‘சென்னை-600028, இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தில் அப்பா கேரக்டரில் நடித்த டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;