‘பைரவா’ ஆடியோ ரிலீஸ் புதிய தகவல்!

விஜய்யின் ‘பைரவா’ ஆடியோ உரிமையை கைபற்றிய பிரபல நிறுவனம்?

செய்திகள் 15-Dec-2016 1:05 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பரதனும், விஜய்யும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ‘பைரவா’ பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘லஹரி’ நிறுவனம் கைபற்றியிருக்கிறது. முதலில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான் முறையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணம், அதனை தொடர்ந்து சென்னையில அடித்த பெரும் புயல் ஆகிய காரணங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலை, மற்றும் சமீபத்தில் விஜய் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்ததாலும் ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டை மிக எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். வருகிற 20-ஆம் தேதி ‘பைரவா’ பாடல்கள் வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது ஜனவரி மாதம் 12-ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;