சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி-2’வின் ஷூட்டிங் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி துவங்விருந்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட பெரும் புயல் மற்றும் மழையால ‘விஐபி-2’வின் துவக்க விழாவை தள்ளி வைத்தார்கள். அதனை தொடர்ந்து ‘விஐபி-2’வின் படப்பிடிப்பு துவக்கம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு க்ளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த படப்பிடிப்பில் தனுஷ் வழக்கமான பாண்ட் சட்டையிலும், அமலா பால் எளிமையான புடவையிலும் காட்சி அளிக்க இருவரும் கணவன், மனைவி மாதிரி இருந்தார்கள். முதல் பாகத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனும் இப்படத்தில் நடிக்க முதல் நாள் படப்பிடிப்பில் அவரும் கலந்துகொண்டார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...