கடந்த 2 மாதங்களாகவே ஒட்டுமொத்த தமிழகமும் அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றது. மத்திய அரசின் கறுப்புப் பண நடவடிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், சமீபத்தில் கோரமாகத் தாக்கிய வர்தா புயுல் என தமிழகம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. மேற்படி சம்பவங்களால் தமிழ்த் திரையுலகமும் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதனால் படங்களை ரிலீஸ் செய்வதிலும் பெரிய குழப்பங்கள் நிலவி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ‘சிங்கம் 3’ படம் முதலில் ரீலீஸ் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 16லிருந்து டிசம்பர் 23க்கு மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 23ஆம் தேதியும் ரிலீஸ் இல்லை என்பதை நடிகர் சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ‘‘சமீபத்திய சில காரணங்களால் ‘எஸ்3’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது. எதுவும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாமே பெரிய நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புவோம். உங்கள் ஆதரவு தொடர வேண்டும்!’’ என்று ட்வீட் செய்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...