கிறிஸ்துமஸ் களத்தில் விஷால், சசிகுமார் படங்கள்!

விஷாலின் ’கத்திசண்டை’யுடன் களத்தில் குதிக்கும் சசிகுமாரின் ‘பலே வெள்ளையத் தேவா’

செய்திகள் 15-Dec-2016 12:23 PM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘கத்திசண்டை’ முதலில் இம்மாதம் ரிலீசாகவிருந்தது. ஆனால் சூர்யாவின் ‘சிங்கம்-3’, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ உட்பட வேறு சில படங்களும் இம்மாத ரிலீஸ் ப்ளானில் இருந்து வந்ததால் ’கத்திசண்டை’யின் ரிலீஸை பொங்கலுக்கு தள்ளி வைத்தார்கள். ஆனால் இப்போது சூர்யாவின் ‘சிங்கம்-3’, ஜெயம் ரவி, அரவிந்த் சாமியின் ‘போகன்’ ஆகிய இரண்டு படங்களும் இம்மாத ரிலீஸ் ப்ளானிலிருந்து பின் வாங்கியிருப்பதால் ‘கத்திசண்டை’யை இம்மாதமே ரிலீஸ் செய்து விட முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘கத்திசண்டை’யை 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸை முன்னிட்டு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. இதனால் விஷால் மற்றும் சசிகுமார் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;