பாக்ஸ் ஆஃபீஸ் மோதலில் போகன், கவண்?

ஒரே நாளில் வெளியாகி மோதவிருக்கும் ‘ஜெயம்’ ரவி, விஜய்சேதுபதி படங்கள்?

செய்திகள் 15-Dec-2016 12:19 PM IST VRC கருத்துக்கள்

லட்சுமணன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா,அரவிந்த்சாமி நடித்துள்ள ’போகன்’ படத்தை இம்மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது போகனின் ரிலீஸை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதாவது ஜனவரி-26 ஆம் தேதி ’போகன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கவண்’ படமும் ஜனவரி 26-ஆம் தேதி அல்லது ஃபிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 26-ஆம் தேதி போகனும், கவணும் ரிலீசாகும் படசத்தில் ஜெயம் ரவி, விஜய்சேதுபதி நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள மற்றொரு படமான ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை இம்மாதம் இறுதியில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;