அஜித் ரசிகரானார் காளிவெங்கட்!

ஜெய் நடிக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படப்பிடிப்பில் அஜித் ரசிகர்கள்!

செய்திகள் 10-Dec-2016 2:02 PM IST VRC கருத்துக்கள்

‘விஜய்சேதுபதி’ படத்தை தொடர்ந்து ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி இயக்கும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரணிதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன் காளிவெங்கட், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் ஷேர் ஆடோ ஓட்டுபவராக, அஜித் ரசிகராக நடிக்கிரார் காளி வெங்கட். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது ‘அஜித் நடிக்கும் படம்’ என்று தகவல் பரவியதால் அங்கு நிறைய அஜித் ரசிகர்கள் கூடிவிட பெரும் பரபரப்பானதாம் அந்த ஏரியா! பிறகு அஜித் ரசிகர்களிடம் படக்குழுவினர் விளக்கம் அளிக்க, படக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு கலைந்து சென்றனராம் அஜித் ரசிகர்கள்!

#Vijaysethupathi #VansanMovies #ShannSudharshan #EnakuVaaithaAdimaigal #KaaliVenkat #Karunakaran #Pranitha #Ajith

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;