7 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’. விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி முதலானோர் அறிமுகமான இப்படம் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் இப்போது உருவாகிறது. இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
ஆனால் ‘வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம்’ பாகத்தை சுசீந்திரன் இயக்கவில்லை. பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வ சேகரன் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்த்தனா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, கிஷோர், சூரி, ரவி மரியா, யோகி பாபு, அப்புக்குட்டி, லஷ்மி, பாவா லட்சுமணன், திருமா, விஜய் கணேஷ், பன்னீர் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூல கதையை சுசீந்திரன் எழிதியிருக்கிரார். வி.செல்வகணேஷ் இசை அமைக்கிறார். கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாத் படத்தொகுப்பு செய்கிறார்.
சசீந்திரன் வழங்க, ‘சாய் அற்புதம் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு மாம்பாக்கம் கோவளஞ்சேரி முனீஸ்வரர் கோவிலில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
#VennilaKabadiKuzhu2 #Vikranth #Suseendiran #SelvaSekaran #Arthana #Soori #Appukutti #VSelvaGanesh
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. ஒரு...
ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. ஒரு...
'சாய் அற்புதம்' சினிமாஸ் தயாரிப்பில் செல்வசேகரன் இயக்கியிருக்கும் படம் 'வெண்ணிலா கபடிக்குழு 2'....