அமீர்கான் வேண்டுகோளை நிராகரித்த ரஜினிகாந்த்!

அமீர்கானின் ‘தங்கல்’ படத்தின் பிரத்யேக காட்சியைக் கண்டுகளித்த ரஜினி, அதன்பிறகான அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார்

செய்திகள் 10-Dec-2016 11:07 AM IST Chandru கருத்துக்கள்

இந்தியாவின் மிகப்பெரிய திரையுலக ஆளுமையென்றால், அது சாட்சாத் நமது சூப்பர்ஸ்டார் ரஜினிதான். தென்னிந்திய சினிமாத்துறை மட்டுமல்லாமல் பாலிவுட்டும் கொண்டாடும் ஒரு மாபெரும் கலைஞன். அப்படிப்பட்ட ஒருவருக்கு தன் கடுமையான உழைப்பினால் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை பிரேத்யேகமாக போட்டுக் காண்பிக்க சென்னை வந்தார் அமீர்கான். சென்னையில் ரஜினி, தனுஷ் உட்பட அவரின் குடும்பத்தாருக்கு ‘தங்கல்’ படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

படத்தைப் பார்த்து முடித்துவிட்டு அமீர்கானை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. குறிப்பாக உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதையில் அவரின் கேரக்டராக மெனக்கெட்டிருப்பதை குறிப்பிட்டுப் பாராட்டினாராம். மனம்குளிர்ந்த அமீர்கான், அப்போது ரஜினியிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். உலகமெங்கும் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கம் ‘தங்கல்’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்காக, பின்னணிக் குரல் கொடுக்க வேண்டும் என்ற அமீர்கானின் வேண்டுகோளை அன்போடு மறுத்துள்ளார் ரஜினி.

#Superstar #Rajinikanth #AamirKhan #Dangal #Dhanush #Thalaivar #Kabali #Endhiran2 #Rajini

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;