கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா தஸ்தர். ஹிந்தியில் இஸாக், மிஸ்டர் எக்ஸ் இரண்டு படங்களில் நடித்திருக்கும் அமைரா, தற்போது சந்தானத்திற்கு ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, ஜாக்கிசானுடன் அமைரா தஸ்தர் இணைந்து நடித்துள்ள ‘குங்ஃபூ யோகா’ படம் வரும் ஜனவரி 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேன்லி டோங் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குங்ஃபூ யோகா’ படத்தில் ஜாக்கி சான் நாயகனாக நடிக்க, முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் அமைரா தஸ்தரும் நடிக்கிறார்கள். இந்திய, சீன நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் 65 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
#kungfuyoga #JackieChan #AmyraDustar #Anegan #Dhanush #KVAnand #StanleyDong #SonuSood
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...