ஆர்யா வழியில் காட்டைக் காக்க கிளம்பிய ஜெயம் ரவி!

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 10-Dec-2016 10:17 AM IST Chandru கருத்துக்கள்

ஏற்கெனவே ‘பேராண்மை’ படத்தில் பழங்குடியினராக நடித்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஜெயம் ரவி, தற்போதைய காட்டையும் இயற்கையையும் பாதுகாக்கும் காவலனாக புதிய படமொன்றில் நடிக்கிறார். ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘வன மகன்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இயக்குனர் விஜய்யுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எடிட்டிங் பணிகளை ஆண்டனி கவனிக்க, சண்டை இயக்கத்தை மேற்கொள்கிறார் ஸ்டன்ட் சில்வா.

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கடம்பன்’ படமும் இயற்கையையும், காட்டையும் பாதுகாக்கும் ஒரு வீரனின் கதைதான். அந்த வழியில் ஜெயரம் ரவியும் தற்போது ‘வன மகன்’ படத்தில் இயற்கை காவலனாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#JayamRavi #Vanamagan #DirectorVijay #HarrisJayaraj #Peraanmai #ThinkBigStudios #SThirunavukarasu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;