அஷ்வின், சுவாதி கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘திரி’. அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கியிருக்கும் இப்படம் தந்தை, மகன் உறவை சொல்லும் படமாம். இந்த படத்திற்கு அஜேஷ் இசை அமைத்திருக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.கே.பாலமுருகன், ஆர்.பி.பாலகோபி இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு படத்தின் சென்சார் சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு அனைவரும் பாரக்க கூடிய படம் என்ற ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ஒரு படத்தின் வெளியீட்டு விஷயத்தில் சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் வாங்குவது முதல் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த விஷயத்தில் ‘திரி’ படக்குழுவினரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து, மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர் சென்சார் குழுவினர்!
#AshwinKakkamanu #Thiri #Vetrikkumaran #AntonRanjith #JohnPeter #Balagopi #BalaMurugan #SwathiReddy
‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் சக்தி. இந்த படத்தை...
அஸ்வின், சுவாதி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘திரி’. அறிமுக இயக்குனர் அசோக்...
காப் த்ரில்லராக உருவாகியிருக்கும் விக்ரம்-வேதா திரைப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்...