கபாலி, தெறி, 24 படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் ‘சிங்கம் -3’

‘சிங்கம் 3’ படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய சினி கேலக்ஸி

செய்திகள் 9-Dec-2016 3:42 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘சிங்கம்-3’ வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுக்க மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது. சூர்யா நடிக்கும் படங்களை வெளிநாட்டில் தொடர்ந்து விநியோகம் செய்து வரும் நிறுவனம் ’சினி கேலக்ஸி’. தற்போது இந்த நிறுவனம் சூர்யாவின் ‘சி3’ படத்தின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யுஎஸ்ஏ, கனடா விநியோக உரிமையையும் கைபற்றியுள்ளது. ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’, சூர்யாவின் ‘24’ ஆகிய படங்களைத் தொடர்ந்து பெரிய விலைக்கு சூர்யாவின் ’சிங்கம்-3’யின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாம்!

சூர்யா நடிக்கும் படங்களுக்கு வெளிநாடுகளில் மிகப் பெரிய வரவேற்பு இருந்து வருவதால் ‘24’ படத்தை வெளியிட்ட தியேட்டர்களை விட அதிக தியேட்டர்களில் சூர்யாவின் ‘சிங்கம் -3’யை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்! ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுடன் கதாநாயகிகளாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்திருக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Singam3 #S3 #Hari #Suriya #Anushka #ShrutiHaasan #StudioGreen #CineGalaxy #Kabali #Theri #24Movie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;