மலையாளத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. சித்திக் இயக்கிய இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா, ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நைனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள். மலையாள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்கவிருக்கிறார் என்றும் மம்முட்டி நடித்த பாத்திரத்தில் தமிழில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தமிழில் ஃப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன் முதலான படங்களை இயக்கிய சித்திக் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. அரவிந்த்சாமி தற்போது தமிழில் ‘போகன்’, ‘சதுரங்கவேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘போகன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
#Aravindswamy #BaskarTheRascal #Mammootty #Siddique #Kaavalan #Bogan #SathurangaVettai2 #Trisha
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், “மெகா ஸ்டார்” மம்முட்டி நடிப்பில்...
ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா முதலானோர் நடிக்கும் படம் ‘பேரன்பு’. பல்வேறு சர்வதேச...
மம்முட்டி, பிருத்திவிராஜ் நடிப்பில் ‘போக்கிரி ராஜா’, மோகன்லால் நடிப்பில் ‘புலிமுருகன்’ உட்பட பல...