‘பைரவா’ ஆடியோ ரிலீஸ் புதிய தகவல்!

விஜய்யின் ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு குறித்த புதிய தகவல்!

செய்திகள் 8-Dec-2016 4:53 PM IST VRC கருத்துக்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருப்பதால் படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘பைரவா’ படக்குழுவினர் படத்தின் இசை வெளியீட்டுக்கும் தேதி குறித்து விட்டார்கள் என்றும் வருகிற 17 ஆம் தேதி சனிக் கிழமையன்று ‘பைரவா’ பாடல்கள் வெளியாகவிருக்கிறது என்பதுமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் ‘பைராவா’ ஆடியோ வெளியிட்டு தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ‘பைரவா’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய்யும், சந்தோஷ் நாராயணனும் முதன் முதலாக இணைந்துள்ள படம் ‘பைரவா’ என்பதால் இப்படப் பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்! இதனால் ‘பைரவா’வின் பாடல்கள் வெளியீட்டு சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத், தம்பி ராமையா முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சுகுமார் கவனித்துள்ளர். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்கிறார்! ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை தொடர்ந்து விஜய்யும், பரதனும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள ‘பைரவா’வை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

#Vijay #Bairavaa #Bharathan #KeerthySuresh #SanthoshNarayanan #JagapathiBabu #VijayaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;