‘120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கலாம்!’ - ‘பறந்து செல்லவா’ ஹீரோ

நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாக நடித்திருக்கும் ‘பறந்து செல்லவா’வில் ரஜினி படப்பாடல்…

செய்திகள் 8-Dec-2016 3:43 PM IST VRC கருத்துக்கள்

நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிற படம் ‘பறந்து செல்லவா’. தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கேங் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து லுத்ஃபுதீன் பாஷா கூறும்போது,

‘‘பறந்து செல்ல வா’வில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்கபட்டுள்ளது. சிங்கப்பூரை இதுவரை யாரும் படம் பிடிக்காத விதமாக இப்படத்தில் புதுவிதமாக படம் பிடித்துள்ளோம். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும். மேலும் இப்படத்தில் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான ‘ நம்ம ஊர் சிங்காரி…’ பாடலை அப்படியே படமாக்கபட்டுள்ளது. அருமைச்சந்திரன் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும்’’ என்றார்.

‘பறந்து செல்லவா’வின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘‘பறந்து செல்லவா’வில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் லுத்ஃபுதீன் முதலில் நடிக்கும்போது மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது பதற்றத்தை போக்க நான் அவருடன் நட்புடன் பழக துவங்கினேன். அதன் பின்பு காட்சிகளிக்ல் சிறப்பாக நடிக்க துவங்கினார். ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக நான் சிங்கப்பூர் சென்றது இந்த படத்திற்காக தான்! நகரம் சார்ந்த இந்த கதையை முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே படமாக்கியுள்ளார் இயக்குனர் தனபால் பத்மநாபன். ‘காதல்’ படத்திற்கு இசை அமைத்த ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. சிங்கப்பூரின் இயற்கை அழகை ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் விஜயகுமார், பிரபாகரன் ஆகியோர் அழகாக படம் பிடித்துள்ளனர். இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சிங்கப்பூரை ஒரு முறை சுற்றி வந்த உணர்வையும் மகிழ்ச்சியையும் தரும்’’ என்றார்.

லுத்ஃபுதீன் பாஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோருடச்ன் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்திருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட ACROSS FILMS நிறுவனமும் கை கோர்த்துள்ளது.

#ParanthuSellaVaa #AcrossFilms #Luthfudeen #AishwaryaRajesh #RJBalaji #Sathish #KalaipuliInternational #DhanapalPadmanaban #Karunakaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;