நிவின் பாலியுடன் இணையும் த்ரிஷா!

நிவின் பாலியுடன் த்ரிஷா நடிக்கும் முதல் மலையாள படம் ‘ஹே ஜூட்’

செய்திகள் 8-Dec-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

மலையாள நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நிவின் பாலிக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘நேரம்’ படத்தை தொடர்ந்து தற்போது கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்து வரும் நிவின் பாலி அடுத்து ‘ரெமோ’ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனத்திற்காகவும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படங்களுடன் ஒரு சில மலையாள படங்களிலும் தற்போது பிசியாக நடித்து வரும் நிவின் பாலி அடுத்து மலையாளத்தின் பிரபல இயக்குனரான சியாம பிரசாத் இயக்கும் ‘ஹே ஜூட்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் நிவின் பாலியுடன் முதன் முதலாக த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா இதுவரை எந்த மலையாள படத்திலும் நடித்ததில்லை. த்ரிஷா நடிக்கும் முதல் மலையாள படம் ‘ஹே ஜூட்’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் கேரளாவில் துவங்கவிருக்கிறது என்பதை இப்படத்தின் இயக்குனர் சியாம பிரசாத் தெரிவித்துள்ளார்.

#Trisha #NivinPauly #Neram #Premam #HeyJoot #24AMStudios #RDRaja #Kodi #TrishainMollywood

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;