மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பெரும்பாலான திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டு படப்பிடிப்பு காரணமாக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். நடிகர் அஜித்தும் வெளிநாட்டில் இருந்ததால் முதல்வரின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டதோடு, உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வந்து முதல்வரை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நியூயார்க்கில் இருக்கும் நடிகர் விக்ரமும் முதல்வரின் மறைவையொட்டி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில்,
‘‘முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன்! அரசியலில் திறமை மிக்க ஒரு தலைவியாக திகழ்ந்து வந்த அவரது மறைவு நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகும். துணிச்சலுக்கு பெயர் பெற்ற அவரது இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெரும் இழப்பாகும்! அவரது ஆத்மா சாந்தி அடைய அவருக்கு இறைவன் அருள் புரிவார்!’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்!
#Vikram #Jayalalitha #TamilNaduChiefMinister #PuratchiThalaivi #Amma #Irumugan #RIPAmma #ChiyaanVikram
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...