அப்போலோவில் வைரமுத்து : கிளம்பிய வதந்திக்கு உடனடி முற்றுப்புள்ளி!

கவிஞர் வைரமுத்துவின் உடல்நலம் குறித்து திடீரென பரவிய வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார் மதன் கார்க்கி

செய்திகள் 7-Dec-2016 12:34 PM IST Chandru கருத்துக்கள்

அப்போலோவிற்கு சாதாரணமாகச் சென்றாலே ஏதோ மிகப்பெரிய பிரச்சனைக்குதான் போகிறார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்திய சில நிகழ்வுகள். 70 நாட்களுக்கும் மேலாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, அதனைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பத்திரிகையாளர் சோ காலமான செய்தி போன்றவை மக்களிடையேயும் ஊடகங்களிடையேயும் சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தான் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக கவிஞர் வைரமுத்து அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றதை அவருக்கு உடல்நலக்குறைவு என்ற ரீதியில் இணையதளங்கள் சில செய்தி வெளியிட்டன. ஆனால், அதனை உடனடியாக மறுத்து கவிஞர் வைரமுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில்...

‘‘வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழு உடல் நலத்தோடு இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது. பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம். என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கு என் வணக்கம்!’’ என்று குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.

‘‘அப்பாவைப்பற்றி வரும் தகவல்களை நம்பவேண்டாம். வழக்கமான பரிசோதனைக்காக அவருடன் நானும்தான் அப்போலோவிற்கு வந்துள்ளேன்!’’ என வைரமுத்துவின் மகன் கவிஞர் மதன் கார்க்கியும் விளக்கமளித்துள்ளார்.

#Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu #Sivakumar #Jayalalitha #ChiefMinister #Suriya #Karthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;