ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த பல்கேரியாவிலிருந்து பறந்து வந்த அஜித்!

தனது 57வது படத்தின் படப்பிடிப்பிற்கு தற்காலிக பிரேக் கொடுத்துவிட்டு ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்த அஜித்

செய்திகள் 7-Dec-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று ஒட்டுமொத்த திரையுலகமும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது. வெளிநாட்டு படப்பிடிப்பு காரணமாக கமல் அமெரிக்காவிலும், நடிகர் அஜித் பல்கேரியாவிலும் இருந்ததால் நேற்று அஞ்சலி செலுத்த வர இயலவில்லை. ஆனால், தகவலைக் கேட்டதுமே நடிகர் கமல் ட்வீட் மூலம், ‘‘சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!’’ என்று குறிப்பிட்டார். அதேபோல நடிகர் அஜித் அறிக்கை ஒன்றையும் பல்கேரியாவிலிருந்து வெளியிட்டார். அந்த அறிக்கையில்,

‘‘மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ்நாட்டு மக்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைபுரிந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் வல்லமையைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.’’ என்று தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்திருந்தார் அஜித்.

அறிக்கை வெளியிட்டதோடு நின்றுவிடாமல், தான் மிகவும் மரியாதையும், அன்பு வைத்திருந்த தலைவர் ஜெயலலிதா என்பதால், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உடனடியாக தான் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பிற்கு தற்காலி ‘பிரேக்’ கொடுத்துவிட்டு பல்கேரியாவிலிருந்து விமானத்தில் சென்னைக்குப் பறந்து வந்தார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் தரையிரங்கிய அஜித், தனது மனைவி ஷாலினியுடன் நேராக சென்னை மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மௌன அஞ்சலி செலுத்தினார்.

அதோடு சென்னை வந்த அஜித்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக பத்திரிகை ஆசிரியர் சோ மறைந்த செய்தியும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் நினைவிடத்திலிருந்து அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று சோவின் குடும்பத்தாரிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

#Ajith #Shalini #Jayalalithaa #TamilNaduChiefMinister #AjithLastRespecttoTNCM #Thala57 #Thala

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100% காதல் ட்ரைலர்


;