பன்முக கலைஞர் சோ காலமானார்!

பிரபல நடிகரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ சென்னையில் காலமானார்!

செய்திகள் 7-Dec-2016 10:26 AM IST VRC கருத்துக்கள்

பிரபல நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான சோ இன்று காலை 3.30 மணி அளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சோ. இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.

சென்னை சட்டகல்லூரியில் சட்டம் படித்து, சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற துவங்கிய சோவுக்கு நாடகங்கள் மீது நாட்டம் இருந்ததால் சில நாடகங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினிமாவுக்கு வந்து சினிமாவில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க துவங்கினார். மறைந்த நடிகர்களான நாகேஷ், எம்.ஜி.ஆர்., ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சோ.

20-க்கும் மேற்பட்ட நாடங்கள் எழுதியுள்ள சோ சில திரைப்படங்களுக்கு கதை திரைக்கதையும் எழுதியுள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்த சோ சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்து வந்தார். அடத்துடன் தமிழக அரசியல் மட்டும் இல்லாமல் இந்திய அரசியலிலும் ஞானம் கொண்ட சோ சிறந்த அரசியல் விமர்சகராகவும் விளங்கி வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பேரன்பு கொண்டவராகவும் அவருக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்து வந்த சோ, தன் எழுத்திலாகட்டும், பேச்சிலாகட்டும் நய்யாண்டி கலந்து எழுதுவது, பேசுவது இயல்பாக கொண்டவராக இருந்தார்! துக்ளக் பத்திரிகையில் வரும் அவரது கேள்வி- பதில் பகுதிக்கென்றே ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட துக்கம் இன்னும் நீங்காத நிலையில். சினிமா மீதும், அரசியில் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்த சோவின் திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சோவின் திடீர் மறைவுக்கு ’டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

#ChoRamaswamy #Rajinikanth #Jayalalitha #GuruSishyan #AarulirunthuArubathuVarai #ChoRamaswamyPassesAway #Ajith

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;