செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் தலைப்பு?

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் 5-Dec-2016 2:49 PM IST Chandru கருத்துக்கள்

தற்போது சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் என 3 படங்களை கையில் வைத்திருக்கும் சந்தானம், நேற்று முதல் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கத் துவங்கியுள்ளார். ரொமான்டிக் காமெடியாக உருவாக உள்ள இப்படத்தின் தலைப்பை தற்போது அறிவித்துள்ளார்கள். படத்திற்கு ‘மன்னவன் வந்தானடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி நடித்த ‘திருவருட் செல்வர்’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலின் முதல் வரி ‘மன்னவன் வந்தானடி தோழி...’ என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி, ரெஜினா ஆகியோரிடம் இப்படத்திற்கான ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா எடிட்டிங் பணிகளை கவனிக்க, சிவா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

#Santhanam #Selvaraghavan #MannavanVandhanadi #SakkaPoduPoduRaja #YuvanShankarRaja #SaiPallavi #ReginaCassandra

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;