சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘ரெமோ’. ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து, பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படம் சமீபத்தில் தெலுங்கிலும் வெளியானது. தெலுங்கில் வெளியான ‘ரெமோ’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ‘ரெமோ’ பட குழுவினர் ஹைதராபாத்தில் ‘ரெமோ’வின் சக்சஸ் மீட் நடத்தியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் ‘ரெமோ’வுக்கு கிடைத்தை நல்ல வரவேற்பை தொடர்ந்து இப்படம் ஹிந்தியிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறதாம். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Remo #24AMStudios #RDRaja #Sivakarthikeyan #KeerthySuresh #Sathish #Anirudh #SaranyaPonvannan
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...