செல்வராகன் - சந்தானம் : ஜாலியாக துவங்கிய படப்பிடிப்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையடன் நேற்று துவங்கியது

செய்திகள் 5-Dec-2016 11:19 AM IST Chandru கருத்துக்கள்

சில படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது, ‘‘என்னது இவர் டைரக்ஷன்ல இவர் நடிக்கிறாரா!’’ என்ற ஆச்சரிய சந்தோஷம் ஏற்படும். அப்படியொரு உணர்வைத் தந்தது செல்வராகன், சந்தானம் கூட்டணியின் பட அறிவிப்பு. தற்போது சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும் என 3 படங்களை கையில் வைத்திருக்கும் சந்தானம், நேற்று செல்வராகவன் இயக்கும் படத்திற்கான பூஜைக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த வேடிக்கையாக புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ள இயக்குனர் செல்வராகவன், ‘‘பார்க்கிறதுக்கு நாங்க ஸ்கூல் பசங்க மாதரியே இருக்கோம்ல... நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் காதலிக்கத் துவங்கிய உற்சாகத்திலிருக்கிறேன்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் குறித்த வேறெந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை. சாய் பல்லவி, ரெஜினா ஆகியோரிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டராத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளன.

#Santhanam #Selvaraghavan #SakkaPoduPoduRaja #YuvanShankarRaja #SaiPallavi #ReginaCassandra

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;