போகன் - டிரைலர் விமர்சனம்

ஆச்சரியமூட்டும் ‘கட்’கள், அதிகப்படியான விஷுவல்கள், மிகச்சிறந்த நடிப்பு கூடவே அவிழ்க்கப்படாத சஸ்பென்ஸ் முடிச்சுகள் என ‘போகன்’ டிரைலர் அசத்துகிறது!

கட்டுரை 5-Dec-2016 10:58 AM IST Chandru கருத்துக்கள்

‘போகன்’ பட அறிவிப்பு வெளிவந்தபோதே அனைவரையும் கவனத்தை ஈர்த்த விஷயம் இப்படத்தை பிரபுதேவா தயாரிக்கிறார் என்பதுதான். கூடவே ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவி, அர்விந்த்சாமியும் கூட்டணி அமைத்ததும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. யு டியூபில் 50 லட்சம் பார்வையிடல்களைக் கடந்த ‘போகன்’ டீஸரைத் தொடர்ந்து, இப்போது முழுநீள டிரைலர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

டீஸரைப்போலவே, டிரைலரிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் எடிட்டர் ஆண்டனி. மொத்த படத்தையும் 2 நிமிடங்களுக்குள் தன்னுடைய ஸ்பீட் கட்ஸ் மூலம் தொகுத்துத் தந்திருக்கிறார் எடிட்டர். ஆனால், படத்தின் முக்கிய திருப்பங்களோ, அல்லது படத்தின் கதை இதுதான் என்பதையே எந்த இடத்திலும் தெரியாத வண்ணம் டிரைலரை உருவாக்கியிருக்கிறார்கள்.

இமானின் ‘போகன்’ தீம் இசைக்கேற்ப ஒவ்வொரு விஷுவலையும் அற்புதமாக கட் செய்து கோர்த்திருக்கிறார் ஆண்டனி. நாம் இசை விமர்சனத்தில் குறிப்பிட்டதைப் போலவே, காட்சிகளோடு பார்க்கும்போது தீம் இசையின் வீரியம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதையே இந்த டிரைலரும் பறைசாற்றுகிறது.

ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, ஹன்சிகா இந்த மூவரைச் சுற்றியும் நகரும் கதையில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்திற்கு பிறகு ஹன்சிகாவிற்கு இருவரும் வில்லனாகிறார்கள் அல்லது யாரோ ஒருவரால் ஹன்சிகாவிற்கு பிரச்சனைகள் உருவாகின்றன. அது என்ன? ஏன்? என்பதற்குப் பின்னால் நிச்சயம் வியூப்பூட்டும் சில ஃபேன்டஸி விஷயங்கள் இருப்பதையே ‘போகன்’ டிரைலர் மூலம் உணர முடிகிறது. வெறும் கிளாமர் குயினாக மட்டுமே பயன்படுத்தப்படாமல், ‘ரோமியோ ஜூலியட்’டைப் போலவே இந்த ‘போகன்’ படத்திலும் ஹன்சிகாவிற்கு மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் லக்ஷ்மண். இமானின் பின்னணி இசை கொஞ்சம் ‘மிருதன்’ டிரைலரை ஞாபகப்படுத்தினாலும் ‘போகன்’ டிரைலரிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.

மொத்தத்தில்.... ‘போகன்’ பட டிரைலரைப் பார்த்தபிறகு முழுப்படத்தையும் பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். குறிப்பாக ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஜெயம் ரவி, அர்விந்த் சாமி இணையின் அசத்தலான நடிப்பை பார்ப்பதற்காகவே ‘போகன்’ தரும் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கம்.

ஆச்சரியமூட்டும் ‘கட்’கள், அதிகப்படியான விஷுவல்கள், மிகச்சிறந்த நடிப்பு கூடவே அவிழ்க்கப்படாத சஸ்பென்ஸ் முடிச்சுகள் என ‘போகன்’ டிரைலர் அசத்துகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;