விக்ரம் படத்தில் சாய் பல்லவியா? - தயாரிப்பு தரப்பு விளக்கம்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் சாய் பல்லவி நடிக்கிறாரா என்பது குறித்து புதிய தகவல்

செய்திகள் 5-Dec-2016 10:23 AM IST Chandru கருத்துக்கள்

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஜய் சந்தர், மீண்டும் ஒரு படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே விக்ரமுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய் சந்தர். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதோடு இப்படத்தில் சாய் பல்லவிதான் நாயகியாக நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல்களும் உலா வந்தவண்ணம் இருந்தன.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள எஸ்எஃப்எஃப் ஸ்கொயர் நிறுவனம், ‘‘விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார் என்பது மட்டுமே தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வேறு யாரையும் நாங்கள் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. மற்ற தகவல்களை விரைவில் வெளியிடுகிறோம்!’’ என்று கூறியுள்ளது.

#Vaalu #VijayChander #STR #ChiyaanVikram #SaiPallavi #Premam #Vikram #Simbu #Hansika #Irumugan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;