‘போகன்’ படத்தை வாங்கிய ‘பைரவா’ வெளியீட்டு நிறுவனம்!

விஜய்யின் ‘பைரவா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கும் நிறுவனம், இப்போது ‘போகன்’ படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறது

செய்திகள் 3-Dec-2016 5:10 PM IST Chandru கருத்துக்கள்

ஜெயம் ரவி, அர்விந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘போகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ‘ரோமியோ ஜூலியட்’ லக்ஷ்மண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளிவந்த ‘போகன்’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து இன்று புதிய டிரைலர் ஒன்று வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ஆம் தேதி இப்படத்தை உலகமெங்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ‘போகன்’ படத்தை வெளியிடும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 2017 பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘பைரவா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கும் ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்’ நிறுவனம் தற்போது ‘போகன்’ படத்தையும் வாங்கி வெளியிடுகிறது.

#Bogan #JayamRavi #Hansika #ArvindSwamy #PrabhuDeva #DImman #Vijay #Bairavaa #Ilayathalapathy #SriGreenProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;