‘2.0’வில் அக்ஷய்குமார் கேரக்டர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தில் அக்ஷய்குமார் கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது

செய்திகள் 3-Dec-2016 3:42 PM IST Chandru கருத்துக்கள்

டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘2.0’ படப்பிடிப்பின்போது யாரோ எடுத்து வெளியிட்ட செல்போன் புகைப்படங்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அக்ஷய்குமாரின் தோற்றம் மிரட்டும் வகையில் இருந்தது. அந்த தோற்றத்திலேயே சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘2.0’ ஃபர்ஸ்ட் போஸ்டரிலும் காட்சியளித்தார் அக்ஷய்குமார். ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவருடைய கேரக்டர் எப்படிப்பட்டது என்பது இத்தனை நாள் ரகசியமாகவே இருந்தது. தற்போது அதுகுறித்த தகவல் ஒன்று ஷங்கருக்கு நெருங்கிய டீமிடமிருந்து கிடைத்துள்ளது.

அதாவது, சயின்டிஸ்ட் வசீகரனிடம் (ரஜினிகாந்த்) பணியாற்றும் சயின்டிஸ்ட் ரிச்சர்டுதான் அக்ஷய்குமாராம். பறவைகளை மிகவும் நேசிக்கும் அக்ஷய்குமார், சுதான்சு பாண்டேவை (பில்லா 2 நடிகர்) சந்திக்கும் வரை எந்த பிரச்சனையும் ஏற்படாதாம். ஆனால், தன் தந்தை புரொபெஸர் போராவின் சாவிற்கு பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் சுதான்சு பாண்டே, அப்பாவி அக்ஷய்குமாரை கொடூரமான வில்லனாக மாற்றுவதுபோல் கதை செல்லும் என தெரிவிக்கிறது ‘2.0’ டீம். இந்த தகவலில் எத்தனை சதவிகிதம் உண்மையிருக்கும் என்பது படம் வரும் சமயத்தில் தெரிந்துவிடும்.

#AkshayKumar #SudhanshuPandey #Rajinikanth #Chitti #Robot #Billa2 #2pointO #Shankar #ARRahman #LycaProdcution

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;