கே.வி.ஆனந்த், சுசீந்திரனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கத்தில் விக்ராந்த்!

தான் இயக்கவிருக்கும் புதியபடமொன்றில், தன்னுடன் நடிக்க விக்ராந்த்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி

செய்திகள் 3-Dec-2016 2:31 PM IST Chandru கருத்துக்கள்

படத்திற்குப் படம் ஏதாவது வித்தியாசமான ரோல்களைச் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடர்ந்து முயற்சிக்கிறார் விக்ராந்த். ‘பாண்டியநாடு’ படத்தில் விஷாலின் நண்பனாக வரவேற்பைப் பெற்ற விக்ராந்த், ‘கெத்து’ படத்தில் உதயநிதிக்கு வில்லனாக கவனம் பெற்றார். இருந்தபோதிலும் அவருக்கான ‘பிரேக்கிங் பாயின்ட்’ அவருடைய கேரியரில் இன்னும் நிகழவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அது தற்போது நிகழக்கூடிய சாத்தியம் விக்ராந்திற்கு உருவாகியிருக்கிறது.

ஆம்... கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டிஆர், மடோனா நடிப்பில் உருவாகிவரும் ‘கவண்’ படத்தில் ஒரு முக்கிய வேடம், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘வெண்ணிலா கபடி குழு படத்தின்’ சீக்குவலில் ஒரு முக்கிய வேடம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடிக்கவிருக்கும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் விக்ராந்த். இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 2வது வாரத்தில் துவங்கும் எனத் தெரிகிறது. இப்படம் குறித்த மற்ற விவரங்கள் கிடைத்ததும் உடனடியாக அப்டேட் செய்கிறோம்.

#Vikranth #UdhayanidhiStalin #Gethu #Suseenthiran #Samuthirakani #Vikram #Kavan #KVAnand

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;