‘ஃபேஸ்புக்’கில் புதிய விளம்பர யுக்தியை கையாண்ட ‘சென்னை-600028–II’ படக்குழுவினர்!

ஃபேஸ்புக் மூலம் விளம்பரத்தில் சிக்ஸர் அடித்த ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ அணியினர்!

செய்திகள் 3-Dec-2016 12:13 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட பிரபு இயக்கத்டில் விரைவில் வெளியாகவிருக்கிற படம் ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’. இப்படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றனர் இப்படக்குழுவினர். ஹைதராபாத்தில் ஃபேஸ்புக் சமூகவலை தளத்தின் தலைமை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மூலம் தங்களது ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தியுள்ளனர் இப்படக் குழுவினர்! ஒரே நேரத்தில் கிட்ட்த்தட்ட 8 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்த இந்த நேரலை நிகழ்ச்சியை 5000 பேர் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி இந்நிழ்ச்சிக்கு 2,50,000 இணையதள பார்வையாளர்களும் 6000 கருத்துக்களும் பதிவாகியிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ‘சென்னை-600028 இரண்டாவாது இன்னிங்ஸ்’ படக்குழுவினருடன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ரசிகர்கள் பங்குபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஃபேஸ்புக் சமூகவலைதளம் வாயிலாக விளம்பரப்படுத்தும் முதல் தமிழ் படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், ‘மிர்ச்சி’ சிவா, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜய் வசந்த், மகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

#Chennai28II #VenkatPrabhu #PremgiAmaran #YuvanShankarRaja #Jai #Shiva #Vaibhav #AravindAkash #NithinSathya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;