போகன் - இசை விமர்சனம்

‘போகன்’ ஆல்பத்தில் கேட்டதும் 3 பாடல்கள் பிடித்துப்போகின்றன... மற்றவை காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் கவனம் பெறலாம்!

இசை விமர்சனம் 3-Dec-2016 12:01 PM IST Chandru கருத்துக்கள்

‘தனிஒருவன்’ கூட்டணியும் ‘ரோமியோ ஜூலியட்’ கூட்டணியும் இணைந்து ‘போகன்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்த ‘டண்டணக்கா’ கூட்டணியின் போகன் ஆல்பம் எப்படி?

டமாலு டுமீலு...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : ஜி.ரோகேஷ்

ஆல்பத்தின் முதல் பாடலையே ‘தெறி’க்கவிடவேண்டுமென முடிவு செய்தே அனிருத்தையும், ரோகேஷையும் களத்தில் இறக்கியிருக்கிறார் டி.இமான். தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களை பாடலின் இடையிடையே சேர்த்து பாடலுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தகால ஃபேமஸ் டயலாக்கான ‘மணந்தால் மகாதேவி’யில் தொடங்கி, அஜித்தின் ‘தெறிக்க விடலாமா....’, கமலின் ‘என் கண்ணு வேணுமான்னு கேட்டியாமே...’, ரஜினியின் ‘சிவாஜியும் நான்தான்... எம்.ஜி.ஆரும்தான்’ எல்லா டயலாக்கையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார்கள். பாடலின் இறுதியில் துப்பாக்கியின் பஞ்ச்சான ‘ஐயாம் வெயிட்டிங்’கோடு பாடல் நிறைவு பெறுகிறது. உடனடி ஹிட்!

செந்தூர....
பாடியவர் : லக்ஸிமி சிவனேஸ்வரலிங்கம்
பாடலாசிரியர் : தாமரை

சமீபகால ஆல்பங்களில் ஹெவி இன்ஸ்ட்ரூமென்டை அதிகமாகப்பயன்படுத்துகிறார் டி.இமான். அப்படிப்பட்ட ஒரு வகைதான் இந்த ‘செந்தூர...’ பாடலும். குத்துப்பாடலா அல்லது மெலடியா என சட்டென யூகிக்க முடியாத தொணியில் ஒலிக்கிறது இப்பாடல். அதற்குக் காரணம் கொஞ்சம் ஆண்மை கலந்த கவர்ச்சிக் குரலில் பாடியிருக்கும் லக்ஸிமி சிவனேஸ்வரலிங்கம். தாமரையின் வரிகள் கவனிக்க வைக்கின்றன. கேட்க கேட்க பிடிக்கும் ரகம்!

கூடுவிட்டு கூடு...
பாடியவர்கள் : ஜோதி நூறன், அர்விந்த் சாமி
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

அர்விந்த் சாமியின் பவர்ஃபுல் வசனத்துடன் துவங்கும் இப்பாடல் ‘பில்லா’வின் ‘செய் ஏதாவது செய்....’ பாடல் ஸ்டைலில் ஒலிக்கிறது. ஜோதி நூறனின் வித்தியாசமான குரலில்தான் முழுப்பாடலும் ஒலிக்கும் என கேட்டுக்கொண்டே வந்தால், இடையில் அர்விந்த்சாமியும் பாடி இன்ப அதிர்ச்சி தருகிறார். பாடலின் இடையிடையே ஒலிக்கும் கோரஸ் குரல்கள் நர்சரி ரைம்ஸ் பாடுவதுபோல் இருக்கிறது.

யாரோ யாரோ அவன்...
பாடியவர் : விஜய் பிரகாஷ்
பாடலாசிரியர் : அரவி

நம்ப முடியாதவண்ணம் குரலில் ஏற்ற இறக்கத்தை கொடுத்துப் பாடுவதில் நிச்சயமாக தற்போதிருக்கும் பாடகர்களில் விஜய் பிரகாஷிற்கு நிகர் அவர் மட்டுமே. படத்தின் முக்கிய தருணத்தில் இடம்பெறும் இப்பாடல் முழுவதம் ‘சீரியஸ் மோடி’ல் பயணிக்கிறது. இசை, வரிகள் என எல்லாமே ‘ஹெவி’யாக இறக்கப்பட்டிருக்கின்றன. காட்சிகளோடு பார்க்கும்போதுதான் பாடலின் முழு உணர்வும் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

வாராய் வாராய்...
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

தமிழின் அந்தக்கால சூப்பர்ஹிட் பாடலான ‘வாராய் நீ வாராய்...’ பாடலை ஞாபகப்படுத்தி ஆரம்பிக்கும் இப்பாடல், சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷலின் அற்புதமான திறமையால் வேறொரு பரிணாமத்தைப் பெறுகிறது. குறிப்பாக ஷ்ரேயாவின் வாய்ஸிலிருக்கும் எனர்ஜியும், உணர்ச்சியும் அற்புதம்! டி.இமான் தனது இசைக்கருவிகளுக்கு பெரியளவில் உழைப்பு கொடுத்திருக்கிறார். இசையும், வரிகளும் ஆஹா... அருமை!

இந்த 5 பாடல்களோடு ‘செந்தார...’ பாடலின் இன்னொரு வெர்ஷன், ‘ஸ்பூக்கி போகன்’ தீம் இசை, டமாலு டுமீலு, செந்தூர, கூடுவிட்டு கூடு ஆகிய பாடல்களின் ‘கரோக்கி’ வெர்ஷன் ஆகியவை ‘போகன்’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. வழக்கமாக இமான் இசையில் ஒலிக்கும் பாடல்களிலிருந்து கொஞ்சம் புதிய தொணியில் ஒலிக்கும் பாடல்களும் இந்த ‘போகன்’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.

மொத்தத்தில்... ‘போகன்’ ஆல்பத்தில் கேட்டதும் 3 பாடல்கள் பிடித்துப்போகின்றன... மற்றவை காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் கவனம் பெறலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;