‘ஜோக்கர்’ போன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம்! – உயர் நீதிமன்றம் கருத்து!

‘ஜோக்கர்’ திரைப்படம் குறித்து பாராட்டிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி!

செய்திகள் 3-Dec-2016 11:26 AM IST VRC கருத்துக்கள்

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவம் தயாரித்து சமீபத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ராஜு முருகன் இயக்கிய இப்படத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் சினிமா கேளிக்கை வரி தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக நீதிபதி கிருபாகரன் பேசும்போது,

‘‘ஜோக்கர்’ நல்ல திரைப்படம். இது போன்ற திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கலாம். வரிவிலக்கு அளிக்கப்பட்ட சில படங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து மக்களை ஏமாற்றியுள்ளது. வரிவிலக்கு அளித்த சில படங்களின் சலுகை மக்களுக்கு போய் சேரவில்லை. மாறாக டிக்கெட்டுக்கு முழு தொகை வசூலிக்கப்பட்டு அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் சம்பாதித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ நல்ல திரைப்படம். இந்த படத்தை சமூக அக்கரையுடன் இயக்கியுள்ளார் ராஜு முருகன். இதுபோன்ற படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம்’’ என்று நீதிபதி கிருபாகரன் ‘ஜோக்கர்’ படத்தை முன் உதாரணமாக வைத்து பேசியுள்ளார்!

#Joker #DreamWarriorPictures #RajuMurugan #SRPrabhu #GuruSomasundaram #RamyaPandian #GayathiriKrishna

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;