வித்தியாசங்களின் விளைநிலம் பார்த்திபன். எதைச் செய்தாலும் அதில் புதுமையும், உற்சாகத்தையும் கலந்து கொடுப்பது பார்த்திபன் ஸ்டைல். அதனாலேயே காலங்கள் கடந்தும் அவரின் படங்கள் இன்றைய இளைஞர்களையும் கவரும் வண்ணம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்தது. இப்போது கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தன குருநாதரின் மகன் சாந்தனு பாக்யராஜை ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ஹீரோவாக்கியிருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். சாந்தனுக்கு ஜோடியாக இப்படத்தில் பார்வதி நாயர் நடித்திருக்கிறார். ‘சம்பாதிக்கிறதெல்லாம் 40 வயசுக்குள்ள... சம்பாதிச்சுடுங்கன்னு ரஜினி பாடியிருக்காரு... பாடி அவர் மட்டும் சம்பாதிக்கிறாரு’ என்ற பார்த்திபன் டச் வசனத்துடன் துவங்கும் இந்த ஒன்றரை நிமிட டிரைலரின் ஆரம்பமே அதகளம். நடிகர்களின் பெயர்களை முழுவதும் சொல்லாமல் அதையும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள். நல்ல சிந்தனை!
முதல் 30 வினாடிகளுக்க ஹ்யூமர், ரொமான்ஸ், அடல்ட் காமெடி என பயணிக்கும் டிரைலர் அதன்பிறகு வேறொரு ஜேனருக்குத் தாவுகிறது. இப்படம் ஹாரரா? இல்லை த்ரில்லரா? என யூகிக்க முடியாதபடி படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறார் பார்த்திபன். தம்பி ராமையா படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றை செய்திருக்கிறார் என்பது டிரைலர் முழுக்க அவர் நிரம்பியிருப்பதிலயே தெரிகிறது. கூடவே சிம்ரனின் கெஸ்ட் ரோலும் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
இந்த டிரைலரில் வெகுவாக வசீகரித்த ஒரு விஷயம்... சத்யாவின் பின்னணி இசை. அதிரடி போக் இசைக்குப் பிறகு டிரைலரின் இறுதியில் மனதை மயக்கும் கிடார் இசையுடன் முடித்திருப்பது அருமை!
மொத்தத்தில்... ‘ஏ ஃபிலிம் வித் மிஸ்டேக்ஸ்’ எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கும் ஆவலை அதிகமாக ஏற்படுத்தியிருக்கிறது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ டிரைலர்.
#Parthiban #KodittaIdangalaiNirappuga #Shanthanu #ParvathyNair #KathaiThiraikathaiVasanamIyakkam #ThambiRamaiah #PrabhuDeva
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் துவங்கியது....
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு சென்ற மாதம் 25-ஆம் தேதி வெளியான...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-64’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக...