சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’, ‘பசங்க-2’ மற்றும் ‘ஜோக்கர்’

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 3 முக்கிய திரைப்படங்கள்!

செய்திகள் 3-Dec-2016 10:44 AM IST VRC கருத்துக்கள்

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான14- ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா நடித்து, தயாரித்த ’24, ‘பசங்க-2’ ஆகிய படங்கள் உட்பட 12 படங்கள் தேர்வாகியுள்ளது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி பெரிதும் பேசப்பட்ட படமான ‘ஜோக்கரு’ம் இவ்விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த படங்களுடன் அமலாபால் முக்கிய கேரக்டரில் நடித்த ‘அம்மா கணக்கு’, பிரபு தேவா, தமன்னா நடித்த ‘தேவி’, விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’, மற்றும் ‘கர்மா’, ‘இறைவி’, ‘நானும் ரௌடி தான்’, ‘உறியடி’ இன்னும் திரைக்கு வராத ’ரூபாய்’, ‘சில சமயங்களில்’ ஆகிய படங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த விழா விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

#Suriya #24Movie #Samantha #VikramKumar #ARRahman #2DEntertainment #SaranyaPonvannan #Pasanga2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;