‘சிங்கம் 3’ படத்தின் அதிகாரபூர்வ புதிய ரிலீஸ் தேதி!

டிசம்பர் 16ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘சிங்கம் 3’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது

செய்திகள் 2-Dec-2016 6:33 PM IST Chandru கருத்துக்கள்

சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘சிங்கம் 3’க்காக மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் நடிகர் சூர்யாவும், இயக்குனர் ஹரியும். முதல் இரண்டு படங்களில் உள்ளூர் போலீஸாக மிரட்டிய துரைசிங்கம் இப்படத்தில் ‘யுனிவர்சல் காப்’பாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் வெளியிடப்பட்டன.

வரும் 16ஆம் தேதி ‘சிங்கம் 3’ படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ஒட்டி டிசம்பர் 23ஆம் தேதி ‘சிங்கம் 3’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

டிசம்பர் 23ஆம் தேதி ஜெயம் ரவியின் ‘போகன்’ படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#Singam #S3 #Singam3 #Hari #Suriya #AnushkaShetty #ShruthiHaasan #StudioGreen #HarrisJayaraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;