‘இறைவி’யை தொடர்ந்து மீண்டும் இணையும் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா!

‘ரேனிகுண்டா’ இயக்குனருடன் இணையும் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா!

செய்திகள் 2-Dec-2016 11:10 AM IST VRC கருத்துக்கள்

‘புரியாத புதிர்’, ‘கவண்’, ‘வட சென்னை’, ‘ விக்ரம் வேதா’ முதலான படங்களில் நடிக்கும் விஜய்சேதுபதி அடுத்து ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ப்ரீ-புரொடகஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான கலைஞர்கள் தேர்வில் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க தேர்வாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி’ படத்தில் இண்ந்து நடித்த விஜய் சேதுபதியும், பாபி சிம்ஹாவும் மீண்டும் இப்படத்தின் மூலம் இணையவிருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு வித்தியாசமான கதாநாயகன் வேடமாம! விஜய்சேதுபதி கேரக்டருக்கு ஈடு கொடுக்கும் விதமாக பாபி சிம்ஹாவின் கதாபாத்திரமும் வலுவாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

#VijaySethupathi #BobbySimha #Jigarthanda #Iraivi #PuriyathaPuthir #Kavan #VikramVedha #Renigunta #PanneerSelvam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;