‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடல் - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரஹமான்!

ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 1-Dec-2016 11:13 AM IST VRC கருத்துக்கள்

1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘காதலன்’. பிரபுதேவா, நக்மா இணைந்து நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘டேக் இட் ஈஸி ஊர்வசி…’ என்ற பாடல் அதிரி புதிரி ஹிட்டை தந்தது. தற்போது இந்த பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மீண்டும் மேடையேற்றவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! ஆனால் இந்த பாடல் சரணத்தில் சில மாறுதல்களை செய்து இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்க திட்டமிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இதில் ரசிகர்களும் பங்குபெற்று சுவாரஸ்யமான், நகைச்சுவயான வரிகளை எழுதி தரலாம் என்று ஃபேஸ்புக் மூலம் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதே நேரம் மற்றொரு முக்கிய அறிவுரையையும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார் இசைப்புயல்! அதாவது நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் களம் இறங்கிய ஹிலாரி க்ளின்டன், ட்ரம்ப் போன்றவர்களையும், இந்தியாவின் கரன்சி (பணம்) விஷயங்களையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;