‘மாவீரன் கிட்டு’ உருவாக காரணமான சுசீந்திரன் ரசிகர்!

‘மாவீரன் கிட்டு’வை இயக்க சுசீந்திரனை தூண்டிய ரசிகர்!

செய்திகள் 1-Dec-2016 11:13 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கிற படம் ‘மாவீரன் கிட்டு’. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படம் சுசீந்திரன் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், தமிழகத்தில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியுள்ளார்! இந்த படம் உருவாக காரணமான ஒரு சம்பவம் குறித்து சுசீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
‘‘எங்களது ‘மாவீரன் கிட்டு’ நாளை வெளிவர இருக்கிறது. இத்திரைப்படம் உருவாக காரணமான ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் ஒரு ரசிகர் என்னிடம் உரிமையாக, ‘சார், ஒரு தமிழனாய் நாங்க எல்லாம் பெருமைப்படுகிற மாதிரி ஒரு படம் பண்ணுங்க’ என்றார். அன்று முதல் பல நேரங்களில் அவர் கூறிய அந்த வார்த்தை என்னை யோசிக்க வைத்தது. ‘மாவீரன் கிட்டு’ இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். நான் ஒரு தமிழனாய் இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கு பெருமை கொள்கிறேன். இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த அந்த ரசிகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;