‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ‘கடம்பன்’. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்து பூசணிக்காய் உடைத்தனர். இறுதிநாள் படப்பிடிப்பில் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உட்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளனர். ஆர்யா, கேத்ரின் தெரெசா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்பட்த்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. ‘குண்டே’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த தீப்ராஜ் ராணா வில்லனாக நடித்துள்ளார். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்திற்காக ஆர்யா கடுமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டு கட்டுமஸ்தான உடம்புடன், மலை கிராமத்து இளைஞனாக வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘மீசையை குமுறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடந்து சுந்தர்.சி.யின் ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம்...