‘கவலை வேண்டாம்’ ஜீவா வீட்டில் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’

‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவும் காஜல் அகர்வாலும் வசித்து வந்த அதே வீட்டில் தற்போது மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு

செய்திகள் 1-Dec-2016 10:32 AM IST Chandru கருத்துக்கள்

காட்சிக்கு காட்சி அழகியலோடு வரும் வேண்டும் என்பதற்காக டெக்னிக்கல் மெனக்கெடல்களை தன் படங்களில் தொடர்ந்து செய்து வருபவர் மணிரத்னம். குறிப்பாக மணிரத்னம் படங்களின் கலை இயக்கத்தில் அத்தனை நேர்த்தியும், யதார்த்தமும் இருக்கும். அந்தவகையில், தற்போது கார்த்தி, அதிதி நடித்துவரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் காட்சி ஒன்றிற்காக அழகான பங்களா ஒன்றைத் தேடி வந்தார் மணிரத்னம். சமீபத்தில் வெளிவந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவாவும், காஜலும் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் வீட்டையே தன் படத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்துள்ளாராம் மணிரத்னம். ஊட்டியிலுள்ள இந்த வீட்டை தன் படத்தின் தன்மைக்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்து படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார் மணிரத்னம்.

#Maniratnam #KaatruVeliyidai #Jiiva #KajalAggarwal #KavalaiVendam #Karthi #MadrasTalkies #Deekay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;