‘களவாணி’ 2-ஆம் பாகமா? - சற்குணம் விளக்கம்!

அதர்வாவை தொடர்ந்து மாதவனை இயக்கும் சற்குணம்!

செய்திகள் 1-Dec-2016 10:14 AM IST VRC கருத்துக்கள்

களவாணி, வாகைசூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் அடுத்து ‘களவாணி’யின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் சில மீடியாக்களில் செய்தியாக வெளியாகியிருந்தது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் சற்குணம் மறுத்து அது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என்னுடைய அடுத்த படமாக ‘களவாணி’ இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணமாக இருக்கிறது. நான் அடுத்து நடிகர் மாதவன் அவர்களை வைத்து தான் படத்தை இயக்கப் போகிறேன் என்பதை ரசிகர்களுக்கும், அனைத்து மீடியா நண்பர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இயக்கத்தில் மற்றும் தயாரிப்பில் வரும் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மாதவன் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Kalavani #Sargunam #VaagaiSoodaVaa #Nayyandi #Dhanush #Vemal #Madhavan #Oviya #SandiVeeran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;