‘கபாலி’க்கு அடுத்த இடத்தில் விஜய்யின் பைரவா!

இரண்டாவது இடத்தில் விஜய்யின் ‘பைரவா’

செய்திகள் 30-Nov-2016 3:15 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதோடு, படத்தின் ஏரியா வியாபர விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. ‘பைரவா’வின் கோவை விநியோக உரிமையை என்.எச்.மீடியா என்ற நிறுவனம் கைபற்றியிருக்கிறது. ரஜினியின் ‘கபாலி’, சசிகுமாரின் ‘கிடாரி’ உட்பட பல படங்களை கோயம்பத்தூரில் விநியோகம் செய்த இந்நிறுவம் ‘பைரவா’வின் விநியோக உரிமையை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியின் ‘கபாலி’ படத்திற்கு அடுத்த படியாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட படம் ‘பைரவா’வாம்! வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ‘பைரவா’வை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் விரைவில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

#Bairavaa #Vijay #Kabali #KeerthySuresh #Rajinikanth #Ranjith #Bharathan #SanthoshNarayanan #NHMedia

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;