10 லட்சத்தை தாண்டிய ‘டூப்ளிக்கா டோமாரி’

40—க்கும் மேற்பட்ட ஸ்டன்ட் கலைஞர்கள் நடனம் ஆடியிருக்கும் ‘டூப்ளிக்கா டோமாரி’

செய்திகள் 30-Nov-2016 12:53 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீகண்டன் இயக்கி வரும் படம் ‘தப்பு தண்டா’. ‘கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரிக்கும் இப்படத்தில் சத்யா, சுவேதா கய் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். இவர் இசை அமைப்பில் கானா வினோத் பாடி சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’ என்று துவங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. யு-ட்யூபில் வெளியான இப்பாடலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் பார்வையிடல்கள் கிடைத்திருக்கிறது. ‘டூப்ளிக்கா டோமாரி’ என்றால் டுபாக்கூர் பையன் என்று அர்த்தம் என்று விளக்கம் தந்துள்ளனர் படக்குழுவினர். இந்தப் பாடலில் 40-க்கும் மேற்பட்ட ஸ்டண்ட கலைஞர்கள் நடனம் ஆடியிருக்கிறார்களாம். ‘மைம்’ கோபி, ஜான் விஜய, அஜய்கோஷ், ஈ.ராமதாஸ், ‘மெட்ராஸ்’ ரவி, அஷ்மிதா பிரியா, ‘ஆத்மா’ ரவி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

#SriKandan, Balu Mahendra, Thappu Thanda, Sathyamoorthy, Narien Balakumar, Gnana Vinoth, Duplika Domaari

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தப்பு தண்டா - டீசர்


;