‘பறந்து செல்லவா’ - சென்னை ஆட்டோக்களில் புதிய விளம்பர யுக்தி!

சென்னை ஆட்டோக்களில் வலம் வரும் ‘பறந்து செல்லவா’ விளம்பரம்!

செய்திகள் 30-Nov-2016 11:05 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் நாசர் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘பறந்து செல்லவா’. ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தை இயக்கிய தன்பால் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தை ‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.அருமை சந்திரன் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாகியுள்ள இப்படம் வருகிற 9-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இப்படத்தை எஸ்.தாணுவின் ‘கலைப்புலி இன்டர்நேஷனல்’ நிறுவனம் வெளியிட, இப்பட விநியோகத்தில் ‘ACROSS FILMS’ நிறுவனமும் கை கோர்த்துள்ளது.

இந்த படத்தை விளம்பரப்படுத்துவதில் இப்படக்குழுவினர் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளனர். அதாவது சென்னையில் ஓடும் கிட்டத்தட்ட 500 ஆட்டோக்களில் ‘LED TV’ பொருத்தப்பட்டு அதில் ‘பறந்து செல்லவா’ படத்தின் விளம்பரங்கள் ஓடவிட்டு, அந்த அட்டோவில் பயணிக்கும் பயணிகள் கண்டு களிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த பத்திரிகையாளார் சந்திப்பில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, இயக்குனர் தனபால் பத்மநாபன், படத்தின் கதாநாயகன் லுத்ஃபுதீன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் இந்த ஆட்டோ பயணத்தில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் தன்பால் பத்மநாபன் படம் குறித்து பேசும்போது, ‘‘ரிலேஷன்ஷிப் என்பது ஒரு மியூச்சல் ரெஸ்பெக்ட்’ என்பது தான் இப்படத்தின் மைய கரு. முழுக்க முழுக்க சிங்கப்பூர் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்ப்பவர்களுக்கு சிங்கப்பூரை ஒரு முறை சுற்றி வந்த ஒரு உணர்வு ஏற்படும். ‘கலைப்புலி’ தாணு சார் இந்த படத்தை பார்த்து, அதன் மீதான நம்பிக்கையால் தான் இப்படத்தை வெளியிட முன் வந்தார். இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி’’ என்றார்.

‘பறந்து செல்லவா’ படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை எம்.வி.ராஜேஷ்குமார் செய்துள்ளார். லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷுடன் முக்கியமான ஒரு கேரக்டரில் சீன நடிகை நரேலே கெங் மற்றும் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, ஜோமல்லூரி, சுஜாதா, ஆனந்தி, சிங்கப்பூர் நடிகை சுகன்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.

#ParanthuSellaVaa #Luthfudeen #Sathish #KalaipuliSThanu #VCreations #VPrabhu #AcrossFilms#KalaipuliInternational

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;