‘கிடாரி’யைத் தொடர்ந்து ‘பலே வெள்ளையத் தேவா’வையும் வாங்கிய நிறுவனம்!

‘கிடாரி’யின் வெற்றி தந்த சந்தோஷத்தில் சசிகுமாரின் ‘பலே வெள்ளையத் தேவா’வையும் வெளியிடுகிறது வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ்

செய்திகள் 30-Nov-2016 10:29 AM IST Chandru கருத்துக்கள்

தற்போதிருக்கும் தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்தை தயாரிப்பதைவிட, அதை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதுதான் பெரிய காரியம். ஒரு குறிப்பிட்ட படத்தை வாங்கிய வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர்களுக்கும் குறைந்தபட்ச லாபமாவது கிடைத்தால்தான் அடுத்தடுத்து அவர்களின் வியாபாரம் தங்குதடையின்றி நிகழும். அந்தவகையில், சசிகுமார் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த ‘கிடாரி’ படத்தை வாங்கி வெளியிட்ட வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்தது. பி அன்ட் சி தியைரங்குகளில் இப்படம் பெரிய வசூலைக் குவித்தது. இதனால், தற்போது சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் ‘பலே வெள்ளையத் தேவா’வின் தமிழ்நாடு தியைரங்க உரிமையையும் வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆர்வத்துடன் கைப்பற்றியிருக்கிறது.

அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோரின் பங்களிப்பில் முழுநீள காமெடிப்படமாக உருவாகியிருக்கிறது ‘பலே வெள்ளையத் தேவா’. ‘கிடாரி’யைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ‘டர்புக்கா’ சிவா இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் ரவீந்திரநாத் குரு.

இப்படத்தை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இந்தவருடமே ‘பலே வெள்ளையத் தேவா’ வெளியாகும் பட்சத்தில், 2016ல் சசிகுமாரின் நடிப்பில் வெளிவரும் 5வது படமாக இப்படம் இருக்கும்.

#BalleVellaiyatheva #Sasikumar #Kidaari #CompanyProduction #SolaiPrakash #DhanyaRavichandran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;