அறிமுக இயக்குனர் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்திரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘புரியாத புதிர்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே தினம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ‘புரியாத புதிர்’ தெலுங்கில் ‘பீட்சா-2’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தமிழில் ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் வெளியிடுகிறார். தெலுங்கில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ‘டி.வி.சினி கிரியேஷன்ஸ்’ டி.வெங்கடேஷ் வாங்கியுள்ளார். இப்படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியிட்டு விழா கடந்த மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து இப்படத்தின் மீது அங்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறதாம். ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனிக்க, சாம்.சி. இசை அமைத்துள்ளார்.
#PuriyathaPuthir #VijaySethupathi #Gayathiri #RanjithJeyakodi #Pizza2 #Pizza #Dharmadurai #MakkalSelvan
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...