இந்தியாவின் ‘டாப் 3’ ஹீரோ : அமீர் கான், சல்மான் கான், ரஜினிகாந்த்

இந்திய அளவிலான சாதனை ஒன்றில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அமீர் கான், சல்மான் கான், ரஜினிகாந்த்

செய்திகள் 29-Nov-2016 6:05 PM IST Chandru கருத்துக்கள்

பாலிவுட் படங்களுக்கு இணையானதொரு எதிர்பார்பையும், வரவேற்பையும் இந்திய அளவில் பெறுவது தமிழ் சினிமாவில் ஷங்கர், ரஜினி படங்கள் மட்டுமே. அந்தவகையில், ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் டீஸர் முதன்முதலில் 1 கோடி பார்வையிடல்கள் என்ற மைல் கல்லை யு டியூபில் பெற்ற முதல் தமிழ் படமாக சாதித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் யு டியூபில் 3 கோடி பார்வையிடல்களை எட்டிய டீஸராக ரஜினிகாந்தின் ‘கபாலி’ டீஸர் சாதனை புரிந்தது. ‘கபாலி’யின் ரெக்கார்டை முறியடித்து இந்திய அளவில் அதிக பார்வையிடல்களைப் பெற்ற டிரைலாக ‘சுல்தான்’ டிரைலர் சாதனை புரிந்தது. தற்போதுவரை ‘சுல்தான்’ டிரைலரை 3 கோடியே 43 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களையும், ‘கபாலி’ டீஸரை 3 கோடியே 28 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையிடல்களையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், ‘சுல்தான்’ டிரைலர் சாதனையை சமீபத்தில் வெளியான அமீர் கானின் ‘தங்கல்’ பட டிரைலர் முறியடித்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘தங்கல்’ டிரைலர் அதற்குள்ளாகவே 3 கோடியே 44 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. இதனால், யு டியூப் டிரைலர்/டீஸர் சாதனையில் இந்திய அளவில் முதல் 3 இடங்களை முறையே அமீர் கான், சல்மான் கான், ரஜினிகாந்த் பெற்றிருக்கின்றனர்.

#Kabali #Rajinikanth #Dangal #AamirKhan #Salmankhan #Sultan #RadhikaApte #Dhansika #AnushkaSharma

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;