‘‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதைக்கு கார்த்தி தான் இன்ஸ்பிரேஷன்!’’ – இயக்குனர் த.செ.ஞானவேல்

நடிகர்கள் சிவகுமார், சூர்யா கலந்துகொண்ட ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆடியோ வெளியிட்டு விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 29-Nov-2016 1:54 PM IST VRC கருத்துக்கள்

‘ஜோக்கர், ‘காஷ்மோரா’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மற்றொறு தயாரிப்பு ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இப்படத்தை பத்திரிகையாளரும், சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷ’னில் முக்கிய பங்கு வகித்தவருமான த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அசோக் செல்வன், பிரியா ஆனந்த் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

அப்போது விழாவுக்கு தலைமையேற்ற நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘‘இந்த படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் விகடனில் நிருபராக இருந்தவர். அந்த பத்திரிகைக்காக என்னைப் பேட்டி காண வந்ததிலிருந்து அவர் எனக்கு பழக்கம் எனப்தோடு எங்கள் குடும்பத்தில் ஒருவராகி விட்டவர்! சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ துவங்க காரணமாக இருந்தவர்களில் ஞானவேலும் ஒருவர்! அவர் இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இந்த படம் மூலம் ஞானவேல் இயக்குனராகவும் ஜெயிப்பார்! இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் பேசும்போது, ‘‘தெகிடி’க்கு பிறகு எனக்கு இந்த படம் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. இப்படத்தின் கேரக்டரில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்துள்ளேன். இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக அமைந்துள்ளது’’ என்றார்.
‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆடியோவை பெற்றுக் கொண்ட நடிகர் சங்க தலைவரும். நடிகருமான நாசர் பேசும்போது, ‘‘சினிமா ஒரு சூதாட்டம். அந்த சூதாட்டத்தில் ரம்மி ஆட்டம் முக்கியமானது. அந்த ரம்மி ஆட்டத்தை நன்றாக ஆட தெரிந்தவர்கள் இப்படத்தை தயாரித்துள்ள எஸ்.ஆர்.பிரபுவும், எஸ்.ஆர். பிரகாஷ் பாபுவும். இந்த படத்தின் இயக்குனர் ஞானவேல் ஒரு முழுமையான படைப்பாளி! பத்திரிகை, இலக்கிய அனுபவம் வாயந்தவர். ஒரு பிரச்சனை என்று வந்தால் அதற்கு உடனடி ஒரு தீர்வு காணக் கூடியை ஒரு அறிவாளி! இந்த படம் 100 கோடி மக்களில் 70 கோடி மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிற படம்! அதனால் இப்படத்தின் வெற்றி குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்’’ என்றார்.

‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆடியோவை வெளியிட்டு பேசிய சூர்யா, ‘‘விகடனில் ஸ்டூடண்ட் ரிப்போரட்டராக இருந்த காலத்திலிருந்து எனக்கு ஞானவேலை தெரியும். சினிமா மூலம் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. ஆனால் சினிமா தவிர்த்து மீதியுள்ள மக்களிடத்திலும் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ‘அகரம் ஃபவுண்டேஷன்’. இந்த அகரம் ஃபவுண்டேஷன் உருவாக காரணமாக இருந்தவரும், அதற்கு அகரம் என்று பெயர் வைத்தவரும் ஞானவேல் தான். அகரம் மூலம் 1500 பேர் படித்து பயனடைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை 10 கோடியில் செய்து முடித்திருக்கிறார் ஞானவேல். அதற்கு முக்கிய காரணம் அவரது நட்பு வட்டம் தான். அவர் இயக்கியுள்ள இந்த படம் அனைவரையும் ரசிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும், ஆச்சர்யப்பட வைக்கும்’’ என்று பாராட்டினார்.

’கூட்டத்தில் ஒருத்த’னை உருவாக்கிய த.செ. ஞானவேல் பேசும்போது, ‘‘நான் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளன்! அதற்கு அப்புறம் தான் எல்லாம். ஸ்கூல், காலேஜில் முன் பெஞ்சில் இருப்பவர்கள், மிடில் பெஞ்சில் இருப்பவர்கள், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் என்று மூன்று கோஷ்டிகள் இருக்கும். அதில் மிடில் பெஞ்சில் இருக்கிற ஒரு மாணவன் பற்றிய கதை தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. நிஜமாக சொன்னால் இந்த கதை உருவாக காரணமாக இருந்தவர் நடிகர் கார்த்தி தான். நிஜத்தில் அவர் தான் இப்படத்தின் கதாநாயகன்! அவர் வீட்டுக்கு சென்று ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது, அண்ணன் மூத்தவராக பிறந்ததால் வீட்டில் அவர் எல்லாருக்கும் செல்லம். அதைப் போல தான் கடைசியாக பிறந்த சகோதரிக்கும்! ஆனால் நடுவில் பிறந்த எனக்கு தான் ஒன்றும் இல்லை! அவர் இப்படி சொன்ன அந்த வார்த்தையிலிருந்து உதித்த கருவை வைத்து உருவாக்கியது தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை. இது போன்ற கதைகளை எஸ்.ஆர்.பிரபு சார், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு சார் போன்ற கிரியேட்டீவ் தயாரிப்பாளர்களால் மட்டும் தான் முடியும். இந்த வாய்ப்பு எனக்கு தந்த அவர்களுக்கு நன்றி’’ என்றார்.

’கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்துடன் நாசர், சமுத்திரகனி, பாலசரவணன், மாரிமுத்து, ஜான் விஜய், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.வர்மா கவனித்திருக்க, கலை இயக்கத்தை கதிர் கவனித்துள்ளார். படத்தொகுப்பை லியோ ஜான் பால் கவனிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

#KoothathilOruvan #AshokSelvan #Joker #Kaashmora #DreamWarriorPictures #PriyaAnand #Nasser #BalaSaravanan #Suriya #Sivakumar #TJ Gnanavel.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;