விஜய் ஆண்டனியை முன்னணி நடிகராக்க ‘சைத்தான்’ தரும் 5 நம்பிக்கைகள்!

5 factors that Saithan makes Vijay Antony enter A-league

செய்திகள் 29-Nov-2016 1:10 PM IST RM கருத்துக்கள்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சைத்தான்’ படம் டிசம்பர் 1ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. அவரின் முந்தைய படங்களைவிட பல மடங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம். ‘சைத்தான்’ படம் விஜய் ஆண்டனியை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு அழைத்துச் செல்வதற்கான 5 நம்பிக்கையான காரணிகளை இங்கே தொகுத்துள்ளோம்.

1. 4 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள ஒரு நடிகரின் படத்திற்கு இத்தனை பெரிய எண்ணிக்கையில் திரையரங்குகள் (1300த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள்) ஒதுக்கப்பட்டிருப்பது அனேகமாக நடிகர் விஜய் ஆண்டனிக்காகத்தான் இருக்கும்.

2. பொதுவாக பெரிய ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்திருக்கும் நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரிலீஸ் தினத்தன்று சிறப்புக்காட்சிகள் ஒதுக்கப்படுவது வழக்கம். விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்காக காலை 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவுகளை இப்போதே சில திரையரங்குகள் துவங்கிவிட்டன.

3. வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியானாலும், அதிக எதிர்பார்ப்புகளோடு வெளிவரும் படங்களை அதில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் 4 படங்களை மட்டுமே வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, படத்தின் முதல் 9 நிமிட காட்சிகளை முன்னோட்டமாக வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறது ‘சைத்தான்’ டீம்.

4. தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்துவரும் விஜய் ஆண்டனி ‘சைத்தான்’ படத்திலும் அதை கடைபிடித்திருக்கிறார் என்பதையே டீஸரும், 9 நிமிட முன்னோட்ட வீடியோவும் நம்பிக்கை தருகிறது.

5. ‘சைத்தான்’ படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘பிச்சகாடு’ படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால், ‘சைத்தானி’ன் தெலுங்கு டப்பிங்கான ‘பெத்தலுடு’ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ‘சைத்தான்’ படத்தை தமிழகத்தில் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;