‘VVV’ தந்த உற்சாகம் : 3வது படத்திற்கு பூஜைபோட்ட விஷ்ணு!

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்து நடித்த விஷ்ணு, தற்போது தன் பேனரில் உருவாகவிருக்கும் 3வது படத்திற்கு பூஜை

செய்திகள் 29-Nov-2016 10:27 AM IST Chandru கருத்துக்கள்

விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து இதுவரை 9வது படங்கள் வெளிவந்துள்ளன. இதில் 2 படங்களைத்தவிர மற்றவை அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள். குறிப்பாக அனைத்துத்தரப்பு ரசிகர்களும் வந்து பார்க்கும் வகையிலான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு. அதோடு, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ எனும் நிறுவனத்தையும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். தன் பேனரில் வெளிவந்த முதல் படமே 50 நாட்களைக் கடந்து வெற்றிபெற்றதால் உற்சாகத்திற்குச் சென்ற விஷ்ணு, ‘கதாநாயகன்’ எனும் புதிய படத்தை தனது 2வது தயாரிப்பாக அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் 3வது படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை இயக்கிய எழிலிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய செல்லா, விஷ்ணுவின் இந்த புதிய படத்தை இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்த மேலும் சில அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#VishnuVishal #VelainuVandhuttaVellaikaran #VishnuVishalStudios #Ezhil #LeonJames #Chella #Sakthi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;